வரிகளை தாமதமின்றி செலுத்த மாநகராட்சி அறிவுறுத்தல்
By DIN | Published On : 04th January 2019 07:20 AM | Last Updated : 04th January 2019 07:20 AM | அ+அ அ- |

ஈரோடு மாநகராட்சிக்குச் செலுத்த வேண்டிய வீட்டு வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், இதர வரி இனங்களை உடனடியாக செலுத்த வேண்டும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதுகுறித்து மாநகராட்சி ஆணையர் மு.சீனி அஜ்மல்கான் வெளியிட்ட அறிக்கை: மாநகராட்சிக்கு செலுத்த வேண்டிய வீட்டு வரி, காலியிட வரி, தொழில் வரி, குடிநீர் கட்டணம், குத்தகை இனங்கள், இதர வரி இனங்களை அலுவலகத்தில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும். இதில், தவறும்பட்சத்தில் எந்தவித முன்னறிவிப்புமின்றி குடிநீர் இணைப்பு துண்டிப்பு செய்யப்படுவதுடன், ஜப்தி, நீதிமன்ற நடவடிக்கை மேற்கொள்ளப்படும். சனி, ஞாயிறு விடுமுறை நாள்களில் அலுவலகத்தில் தொகை செலுத்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அதில் குறிப்பிட்டுள்ளார்.