அரசு ஊழியர்கள் ஆர்ப்பாட்டம்
By DIN | Published On : 03rd July 2019 07:30 AM | Last Updated : 03rd July 2019 07:30 AM | அ+அ அ- |

தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் மீதான தற்காலிக பணி நீக்கத்தை ரத்து செய்ய வலியுறுத்தி ஈரோட்டில் அரசு ஊழியர்கள் செவ்வாய்க்கிழமை ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கம் சார்பில் ஈரோடு வட்டாட்சியர் அலுவலக வளாகத்தில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்துக்கு, சங்கத்தின் மாவட்டத் தலைவர் பாஸ்கர் பாபு தலைமை வகித்தார். மாவட்டச் செயலாளர் வெங்கிடு முன்னிலை வகித்தார்.
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாநிலத் தலைவர் சுப்பிரமணியன் பணி ஓய்வு பெறும் நாளில் தற்காலிக பணி நீக்கம் செய்த ஆட்சியாளர்களின் பழிவாங்கும் நடவடிக்கையைக் கண்டித்தும், மாநிலத் தலைவர் மீதான தற்காலிக பணி நீக்க உத்தரவை ரத்து செய்து, பணி ஓய்வு ஆணை வழங்க வேண்டும் என்று வலியுறுத்தியும் ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன.
இந்த ஆர்ப்பாட்டத்தில் அரசு ஊழியர்கள் சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...