இன்று மின் நுகர்வோர் குறைதீர் கூட்டம்
By DIN | Published On : 03rd July 2019 07:28 AM | Last Updated : 03rd July 2019 07:28 AM | அ+அ அ- |

ஈரோடு நகரியம் கோட்ட அளவிலான மின் நுகர்வோர் குறைதீர்க்கும் கூட்டம் ஈரோடு மின் பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் தலைமையில் ஈரோடு நகரியம் கோட்ட செயற்பொறியாளர் அலுவலகத்தில் புதன்கிழமை (ஜூலை3) காலை 11 மணிக்கு நடைபெற உள்ளது.
இந்தக் கூட்டத்தில் மின் பயனீட்டாளர்கள் மேற்பார்வை பொறியாளரை நேரில் சந்தித்து தங்களின் குறைகளைத் தெரிவித்து நிவர்த்தி பெறலாம். ஈரோடு மின்பகிர்மான வட்ட மேற்பார்வை பொறியாளர் த.ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பில் இத்தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.