பர்கூர் வனத்தில் யானை தாக்கியதில் விவசாயி காயம்
By DIN | Published On : 03rd July 2019 07:28 AM | Last Updated : 03rd July 2019 07:28 AM | அ+அ அ- |

அந்தியூரை அடுத்த பர்கூர் வனப் பகுதியில் காட்டு யானை தாக்கியதில் விவசாயி காயமடைந்தார்.
பர்கூரை அடுத்த துருசனாம்பாளையம் பகுதியைச் சேர்ந்தவர் போலன் (49). விவசாயி. இவர், தம்புரெட்டி பகுதியில் உள்ள தனது உறவினர் வீட்டுக்குச் சென்றுவிட்டு, மீண்டும் துருசனாம்பாளையத்துக்கு செவ்வாய்க்கிழமை திரும்பிக் கொண்டிருந்தார். தாமரைக்கரை குளம் அருகே வந்தபோது அந்த வழியே வந்த காட்டு யானை, போலனைத் தாக்கியுள்ளது. இதில் பலத்த காயமடைந்த போலன் கூச்சலிட்டார். இதனைக் கேட்ட அப்பகுதியினர் யானையை விரட்டியதோடு, போலனை மீட்டு அந்தியூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இதுகுறித்து, அந்தியூர் வனத் துறையினர் விசாரித்து வருகின்றனர்.