உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ரூ. 7 லட்சம் நன்கொடை: கே.கே.பாலுசாமி வழங்கினார்
By DIN | Published On : 09th June 2019 03:01 AM | Last Updated : 09th June 2019 03:01 AM | அ+அ அ- |

அமெரிக்காவில் உள்ள சிகாகோ நகரில் நடைபெறவுள்ள 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ஈரோடு கே.கே.பாலுசாமி அன்ட் கோ சார்பில் ரூ. 7 லட்சம் நன்கொடை வழங்கப்பட்டுள்ளது.
அமெரிக்காவின் சிகாகோ நகரில் உள்ள அமெரிக்காவாழ் தமிழர்கள் சார்பில் 10ஆவது உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாடு ஜூலை 4ஆம் தேதி முதல் ஜூலை 7ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இதில் கலந்து கொண்டு ஆராய்ச்சிக் கட்டுரைகளை சமர்ப்பிக்கவும், சொற்பொழிவு நிகழ்த்தவும் உலகமெங்கிலும் இருந்து தமிழ் அறிஞர்கள் அழைக்கப்பட்டுள்ளனர். இந்த மாநாட்டை சிறப்பாக நடத்திட நிதியுதவி அளிக்க வேண்டும் என மாநாட்டு நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது. இதற்காக, கடந்த 60 ஆண்டுகளாக ஈரோட்டில் இயங்கி வரும் கே.கே.பாலுசாமி அன்ட் கோ நிறுவனத்தின் நிறுவனர் கே.கே. பாலுசாமி, நிர்வாக இயக்குநர் அருண்குமார் ஆகியோர் உலகத் தமிழ் ஆராய்ச்சி மாநாட்டுக்கு ரூ. 7 லட்சம் நன்கொடையை மாநாட்டுப் பிரதிநிதியான அறவாழியிடம் அண்மையில் அளித்தனர்.