கண்காணிப்பு கேமரா பொருத்தி குற்றச் செயல்களைத் தடுக்க வேண்டும்: காவல் கண்காணிப்பாளர் சக்திகணேசன்

ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் பெருந்துறை உட்கோட்டப் பொதுமக்களுக்கான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு முகாம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
Updated on
1 min read


ஈரோடு மாவட்ட காவல் துறை சார்பில் பெருந்துறை உட்கோட்டப் பொதுமக்களுக்கான குற்றத் தடுப்பு விழிப்புணர்வு முகாம் பெருந்துறையில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
இந்த முகாமுக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் எஸ்.சக்திகணேசன் தலைமை வகித்து பேசியதாவது:
பெருந்துறை பகுதியில் காவல் துறை சார்பில் முக்கிய இடங்கள், நெடுஞ்சாலைகள் மற்றும் சாலை சந்திப்புகளில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டுள்ளன.
பெருந்துறை பகுதியில், வெளியூர் நபர்கள் அதிக அளவில் தங்கி பணிபுரிகிறார்கள். அதனால், குற்றச் சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன. இதைக் கட்டுப்படுத்த போதுமான காவலர்கள் இல்லை. எனவே பொதுமக்கள் தங்களையும், தங்கள் உடமைகளையும் பாதுகாத்துக் கொள்ள முன்வர வேண்டும். அதற்கு, தங்கள் வீடுகள், நிறுவனங்கள், தொழிற்சாலைகளில் கண்காணிப்பு கேமரா பொருத்த வேண்டும். கண்காணிப்பு கேமரா உள்ளதை அறிந்தாலே குற்ற செயலில் ஈடுபடுபவர்கள் பயப்படுவார்கள் என்று கூறினார். 
இந்த நிகழ்ச்சியில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட பெருந்துறை சட்டப்பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாசலம் பேசியதாவது:
பெருந்துறை நகர் முழுவதும் பொதுமக்கள் பங்களிப்புடன் கண்காணிப்பு கேமராக்கள் பொறுத்த திட்டமிடப்பட்டுள்ளது. பெருந்துறை நகரில் 5 இடங்களில் வட்டப் பாதை அமைக்கப்பட்டு சாலை விபத்துகள் குறைக்கப்பட்டுள்ளன. பெருந்துறை வழியாகச் செல்லும் நான்கு வழிச் சாலையில் முக்கிய இடங்களில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு நெடுஞ்சாலை குற்றச் செயல்கள் குறைக்கப்பட்டுள்ளன.
வடமாநிலத்தவர்களை பணியில் அமர்த்தி உள்ள தொழில் நிறுவனங்கள், அவர்களது முழு விவரத்துடன கூடிய அடையாள அட்டைகள் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது என்றார்.
இதில், பெருந்துறை காவல் துணைக் கண்காணிப்பாளர் ராஜாகுமார், பெருந்துறை லாரி உரிமையாளர் சங்கத் தலைவர் கே.பி.ராமசாமி, பெருந்துறை பசுமை இயக்கத் தலைவர் சி.செளந்தரராஜன், அவிநாசி-அத்திக்கடவுத் திட்ட ஒருங்கிணைப்பாளர் மு.முருகபூபதி, பெருந்துறை ஒன்றியக் குழு முன்னாள் தலைவர் எஸ்.பெரியசாமி, மாவட்ட நெசவாளர்கள் கூட்டுறவுச் சங்க சம்மேளனத் தலைவர் சந்திரசேகர் மற்றும் அரசு அதிகாரிகள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com