நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு பூட்டு: சத்தியில் போக்குவரத்து போலீஸார் நடவடிக்கை
By DIN | Published On : 09th June 2019 03:00 AM | Last Updated : 09th June 2019 03:00 AM | அ+அ அ- |

சத்தியமங்கலத்தில் நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தும் வாகனங்களுக்கு போக்குவரத்து போலீஸார் பூட்டு போட்டு அபராதக் கட்டணம் வசூலித்து வருகின்றனர்.
சத்தியமங்கலம் கடை வீதியில் உள்ள சாலையின் இருபுறமும் கார் உள்ளிட்ட வாகனங்கள் நிறுத்தப்படுவதால் பஸ், லாரி உள்ளிட்ட வாகனங்கள் செல்வதில் மிகுந்த சிரமம் ஏற்பட்டு வருகிறது. இந்நிலையில் கடை வீதியில் உள்ள சாலையின் இருபுறமும் வாகனங்களை நிறுத்தக் கூடாது என போக்குவரத்து போலீஸார் நோ பார்க்கிங்' அறிவிப்புப் பலகை வைத்தும் பயனில்லை.
இந்நிலையில், தற்போது நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனங்களுக்கு பூட்டு போட்டு அபராதக் கட்டணம் வசூலிக்கின்றனர். நோ பார்க்கிங்' பகுதியில் நிறுத்தப்படும் வாகனத்தின் சக்கரத்தைப் பூட்டிவிட்டு, பின்னர் வாகனத்தின் கண்ணாடியில் பூட்டு போடப்பட்டதற்கான காரணம், போக்குவரத்து காவல் துறையின் தொடர்பு எண் குறிப்பிடப்பட்ட நோட்டீûஸ ஒட்டுகின்றனர்.
வாகன உரிமையாளர் வந்து அபராதக் கட்டணம் செலுத்திய பின்னர் வாகனத்தை விடுவிக்கின்றனர். இந்தத் திட்டத்தால் நோ பார்க்கிங்' பகுதியில் வாகனம் நிறுத்துவது குறையும் என போக்குவரத்து போலீஸார் நம்பிக்கை தெரிவித்துள்ளனர்.