இன்று "அம்மா' திட்ட முகாம்கள்
By DIN | Published On : 14th June 2019 08:55 AM | Last Updated : 14th June 2019 08:55 AM | அ+அ அ- |

ஈரோடு மாவட்டத்தில் உள்ள 10 வருவாய் வட்டங்களிலும் "அம்மா' திட்ட முகாம்கள் வெள்ளிக்கிழமை (ஜூன்14) நடைபெறுகின்றன.
ஈரோடு வட்டத்தில் வெண்டிபாளையம் கிராம நிர்வாக அலுவலகம், பெருந்துறை வட்டத்தில் பெரிய வீரசங்கிலி கிராம நிர்வாக அலுவலக வளாகம், மொடக்குறிச்சி வட்டத்தில் நஞ்சை ஊத்துக்குளி-ஆ கிராம நிர்வாக அலுவலகம், கொடுமுடி வட்டத்தில் புஞ்சை கொளாநல்லி-ஆ கிராம நிர்வாக அலுவலக வளாகம், பவானி வட்டத்தில் சின்னப்புலியூர் ஊராட்சி அலுவலகங்களில் "அம்மா' திட்ட முகாம் நடைபெறும். இதுபோல சத்தியமங்கலம் வட்டத்தில் பவானிசாகர், கரிதொட்டம்பாளையம் ஊராட்சி மன்ற அலுவலகம், கோபி வட்டத்தில் அம்மாபாளையம், மகாளியம்மன் திருமண மண்டபம், அந்தியூர் வட்டத்தில் அம்மாபேட்டை கால்நடை மருந்தக வீதி சமுதாயக்கூட வளாகம், தாளவாடி வட்டத்தில் கெட்டவாடி கிராம நிர்வாக அலுவலகம், நம்பியூர் வட்டத்தில் நம்பியூர் சமுதாயக்கூடம் ஆகிய இடங்களிலும் "அம்மா' திட்ட முகாம்கள் நடைபெறும்.
அறிவிக்கப்பட்டுள்ள இடங்களில் காலை 10 மணிக்கு முகாம் தொடங்கி நடைபெறும். இதில் வருவாய்த் துறை, கூட்டுறவுத் துறை உள்ளிட்ட பல்வேறு துறை அதிகாரிகள் பங்கேற்று பொதுமக்களிடம் கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டு உரிய நடவடிக்கையெடுப்பார்கள். எனவே இம்முகாம்களில் அந்தந்தப் பகுதி பொதுமக்கள் பங்கேற்று பயன்பெறலாம்.
இத்தகவல் ஈரோடு மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.