மின் தடை அறிவிப்பு ரத்து
By DIN | Published On : 14th June 2019 08:54 AM | Last Updated : 14th June 2019 08:54 AM | அ+அ அ- |

கோபி கோட்டத்துக்கு உள்பட்ட கோபி துணை மின் நிலையத்தில் வெள்ளிக்கிழமை (ஜூன் 14) அறிவிக்கப்பட்ட மின் தடை ரத்து செய்யப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கோபி துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக வெள்ளிக்கிழமை மின்தடை ஏற்படும் என அறிவிக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் நிர்வாகக் காரணமாக இந்த மின்தடை அறிவிப்பு தற்போது ரத்து செய்யப்பட்டுள்ளது.
எனவே கோபி பேருந்து நிலையம், மொடச்சூர், பா.வெள்ளாளபாளையம், நஞ்சகவுண்டன்பாளையம், குள்ளம்பாளையம், நாதிபாளையம், வடுகபாளையம், வேட்டைக்காரன்கோயில், நாகதேவன்பாளையம், கொரவம்பாளையம், பழையூர், பாரியூர், நஞ்சைகோபி, உடையாக்கவுண்டன்பாளையம் ஆகிய பகுதிகளில் வெள்ளிக்கிழமை வழக்கம்போல் மின் விநியோகம் இருக்கும்.
இத்தகவலை கோபி கோட்ட செயற்பொறியாளர் ந.அ.சங்கர் தெரிவித்துள்ளார்.