பவானியை அடுத்த அம்மாபேட்டையில் வேன் மோதியதில் இளைஞர் வியாழக்கிழமை உயிரிழந்தார்.
அம்மாபேட்டையை அடுத்த பூனாச்சி, அயன்தோட்டத்தைச் சேர்ந்தவர் பிரபு (27). இவர் அப்பகுதியில் உள்ள தனியார் ஆலையில் ஓட்டுநராக வேலை செய்து வந்தார்.
இந்நிலையில், கோனமூக்கனூர் பிரிவு அருகே பிரபு சாலையோரத்தில் வியாழக்கிழமை நின்று கொண்டிருந்தார். அப்போது அந்த வழியே வேகமாக வந்த ஒரு வேன், அவர் மீது மோதியது.
இதில் பலத்த காயமடைந்த பிரபு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார்.
இதுகுறித்த புகாரின் பேரில் அம்மாபேட்டை போலீஸார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.