அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு புதிய ஓய்வூதிய திட்டம்
By DIN | Published On : 06th March 2019 09:24 AM | Last Updated : 06th March 2019 09:24 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சி தாலுகா அறச்சலூர் அருகே வைக்கோல் ஏற்றி வந்த வாகனம், மின் கம்பியில் உரசி தீப் பிடித்து எரிந்து சாம்பலானது.
தருமபுரி மாவட்டம், முடுக்கம்பட்டியைச் சேர்ந்தவர் வைக்கோல் வியாபாரி சிவலிங்கம். இவர், அறச்சலூர் பகுதியில் வைக்கோல்களை விலைக்கு வாங்கி வேனில் ஏற்றிக்கொண்டு வெள்ளகவுண்டன்வலசு பகுதியில் செவ்வாய்க்கிழமை மதியம் வந்தபோது தாழ்வாக இருந்த மின் கம்பியில் வைக்கோல் வாகனம் உரசி தீப்பிடித்தது.
இதைப் பார்த்த விவசாயிகள் சத்தம்போட்டு, வைக்கோல் ஏற்றி வந்த வாகனத்தை தடுத்து நிறுத்தி தீயை அணைக்க முயன்றனர் .
தீ கட்டுக்குள் வராததால் மொடக்குறிச்சி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் அளித்தனர். தீயணைப்பு வாகனம் வருவதற்குள் வைக்கோல் வாகனம் முற்றிலும் எரிந்து சேதமடைந்தது. இது குறித்து அறச்சலூர் போலீஸார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.