தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுப் பார்வையாளர் ஆய்வு
By DIN | Published On : 28th March 2019 09:28 AM | Last Updated : 28th March 2019 09:28 AM | அ+அ அ- |

மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறையில் பொதுப் பார்வையாளர் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார்.
ஈரோடு மக்களவைத் தொகுதிக்கு பொதுப் பார்வையாளராக ஐஏஎஸ் அதிகாரி மாணிக் குர்ஷால் நியமிக்கப்பட்டுள்ளார். அவர் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் உள்ள தேர்தல் கட்டுப்பாட்டு அறை, ஊடக சான்று மற்றும் கண்காணிப்பு மையத்தில் புதன்கிழமை ஆய்வு மேற்கொண்டார். தொடர்ந்து அவர் மாவட்ட தேர்தல் அதிகாரி முன்னிலையில் நடந்த வேட்பு மனுக்கள் பரிசீலனையைப் பார்வையிட்டார். அப்போது மாவட்ட வருவாய் அலுவலர் ச.கவிதா, மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலர் ச.விக்னேஷ், அலுவலர்கள் உள்ளிட்டோர் உடனிருந்தனர். பொதுப்பார்வையாளர் மாணிக் குர்ஷாலிடம் தேர்தல் குறித்த புகார்களை 9585387142 என்ற செல்லிடப்பேசி எண்ணில் தொடர்பு கொண்டு தெரிவிக்கலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...