வாய்க்காலில் மூழ்கி கல்லூரி மாணவர் சாவு
By DIN | Published On : 28th March 2019 09:27 AM | Last Updated : 28th March 2019 09:27 AM | அ+அ அ- |

பெருந்துறை அருகே, வாய்க்காலில் குளிக்கச் சென்ற கல்லூரி மாணவர் நீரில் மூழ்கி உயிரிழந்தார்.
ஈரோடு, மூலப்பாளையத்தைச் சேர்ந்த செந்தில் மகன் பிரதாப் (18). இவர், ஈரோடு, நஞ்சானபுரம் அருகே உள்ள தனியார் கல்லூரியில் பி.எஸ்சி. முதலாமாண்டு கணிதம் படித்து வந்தார்.
கல்லூரி முடிந்து நண்பர்களுடன் பெருந்துறை, ஈரோடு சாலையிலுள்ள கீழ்பவானி வாய்க்காலில் குளிப்பதற்காக செவ்வாய்க்கிழமை மாலை சென்றார். அப்போது, நீரில் மூழ்கி காணமால் போனார்.
பெருந்துறை தீயணைப்பு நிலைய வீரர்கள் இரவு முழுவதும் தேடியும் அவரை மீட்க முடியவில்லை. இந்நிலையில், சென்னிமலை ஒன்றியம், வெள்ளோடு அருகே, அரவிளக்குமேட்டுபாளையம் என்ற இடத்தில் பிரதாப் உடல் புதன்கிழமை கண்டுபிடிக்கப்பட்டது.
இதுகுறித்து, வெள்ளோடு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...