கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் ரூ.3.94 லட்சம் உண்டியல் காணிக்கை
By DIN | Published On : 30th March 2019 07:17 AM | Last Updated : 30th March 2019 07:17 AM | அ+அ அ- |

ஈரோடு கள்ளுக்கடைமேடு பத்ரகாளியம்மன் கோயிலில் பக்தர்கள் ரூ.3.94 லட்சத்தை உண்டியலில் காணிக்கையாக செலுத்தி இருந்தனர்.
கோயிலின் உள்பகுதி மற்றும் வெளி பிரகாரத்தில் பக்தர்கள் காணிக்ககை செலுத்துவதற்காக நிரந்தரமாக 4 உண்டியல்களும், பண்டிகை காலத்துக்காக 4 உண்டியல்களும் என 8 உண்டியல்கள் உள்ளன.
இந்த உண்டியல்கள் அனைத்தும் 3 மாதங்களுக்கு ஒருமுறை, திருவிழா காலங்களில் திறந்து காணிக்கை எண்ணப்படுகின்றன. தற்போது கோயிலில் குண்டம் திருவிழா நிறைவடைந்த நிலையில் வெள்ளிக்கிழமை காலை உண்டியல் காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. இப்பணி, இந்து சமய அறநிலையத்துறை உதவி ஆணையர் த.நந்தகுமார் தலைமையில் பரம்பரை அறங்காவலர் எஸ்.தங்காயம்மாள், ஆய்வாளர் எஸ்.பாலசுந்தரி ஆகியோர் முன்னிலையில் நடைபெற்றது. 8 உண்டியல்களிலும் பக்தர்கள் அளித்த காணிக்கையாக ரூ.3,94,510 ரொக்கம், 36.50 கிராம் தங்கம், 92.30 கிராம் வெள்ளி நகைகள் இருந்தன. காணிக்கை எண்ணும் பணியில் 10-க்கும் மேற்பட்ட பணியாளர்கள், பக்தர்கள் ஈடுபட்டனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...