ஈரோடு மக்களவைத் தொகுதியில் போட்டியிடும் 20 வேட்பாளர்களின் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரும், ஈரோடு மாவட்ட ஆட்சியருமான சி.கதிரவன் வெள்ளிக்கிழமை மாலை வெளியிட்டார்.
ஈரோடு மக்களவைத் தொகுதிக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 19ஆம் தேதி தொடங்கியது. முதல் 3 நாள்களில் ஒருவர் கூட மனு தாக்கல் செய்யவில்லை. 22 ஆம் தேதி 5 பேர், 25 ஆம் தேதி 11 பேர், 26 ஆம் தேதி 13 பேர் என மொத்தம் 29 பேர், 34 மனுக்களை தாக்கல் செய்தனர்.
இவற்றில், மாற்று வேட்பாளர், கூடுதல் மனு ஆகியன தள்ளுபடி செய்யப்பட்டு, 21 பேரின் வேட்பு மனுக்கள் ஏற்றுக்கொள்ளப்பட்டன. அமமுக மாற்று வேட்பாளரான முன்னாள் அமைச்சர் சி.சண்முகவேலு மனுவை திரும்பப் பெற்றுக்கொண்டார்.
அதைத் தொடர்ந்து ஈரோடு மக்களவைத் தொகுதியில் 20 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை தேர்தல் நடத்தும் அலுவலரான மாவட்ட ஆட்சியர் சி.கதிரவன் வெள்ளிக்கிழமை மாலை
வெளியிட்டார்.
அதன்படி திமுக சார்பில் அ.கணேசமூர்த்தி, பகுஜன் சமாஜ் கட்சி சார்பில் ம.கோபால், அதிமுக சார்பில் ஜி.மணிமாறன், உழைப்பாளி மக்கள் கட்சி சார்பில் பொ.குப்புசாமி, இந்திய கணசங்கம் கட்சி சார்பில் ரா.குப்புசாமி, மக்கள் நீதி மய்யம் சார்பில் ஆ.சரவணக்குமார், நாம் தமிழர் கட்சி சார்பில் மா.கி.சீதாலட்சுமி ஆகியோர் போட்டி
யிடுகின்றனர்.
சுயேச்சைகளாக அ.அருணாச்சலம், சி.ஆனந்தி, எ.சி.கணேசமூர்த்தி, மு.கணேசமூர்த்தி, அ.கதிர்வேல், பி.கார்த்திகேயன், பி.சித்ரா, கொ.சுப்பிரமணியம், கா.சி.செந்தில்குமார், எஸ்.தர்மலிங்கம், ஆ.நடராஜன், நா.பரமசிவம், ஆ.மணி ஆகியோர் போட்டியிடுகின்றனர். இவர்களுக்கான சின்னம் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இவை தேர்தல் ஆணையத்தின் அனுமதியை பெற்ற பின்னர் அறிவிக்கப்படும் என தேர்தல் அதிகாரிகள் தெரிவித்தனர்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.