3 பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிப்பு
By DIN | Published On : 05th May 2019 03:45 AM | Last Updated : 05th May 2019 03:45 AM | அ+அ அ- |

ஈரோடு, பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் சாயக் கழிவு நீரை வெளியேற்றியதாக 3 பட்டறைகளின் மின் இணைப்பு சனிக்கிழமை துண்டிக்கப்பட்டது.
ஈரோடு சுற்று வட்டாரத்தில் பி.பெ.அக்ரஹாரம், அசோகபுரம் பகுதிகளில் இருந்து பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் சுத்திகரிக்கப்படாத சாயக்கழிவு நீர் வெளியேற்றப்படுவதாக புகார் எழுந்தது. அதைத் தொடர்ந்து மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளர் மலையாண்டி தலைமையில் மாசுக் கட்டுப்பாட்டு வாரிய அதிகாரிகள் பிச்சைக்காரன்பள்ளம் ஓடையில் வெள்ளி, சனிக்கிழமைகளில் ஆய்வு செய்தனர்.
இதில் சாயக்கழிவு நீர் சுத்திகரிப்பு செய்யாமல் வெளியேற்றப்பட்டது தெரியவந்தது. அதைத் தொடர்ந்து ஒரு சாயப்பட்டறை, இரண்டு சலவைப் பட்டறைகளின் மின் இணைப்பு துண்டிக்கப்பட்டது.