நந்தா பொறியியல் கல்லூரிகளில் வளாகத் தேர்வு
By DIN | Published On : 05th May 2019 03:44 AM | Last Updated : 05th May 2019 03:44 AM | அ+அ அ- |

ஈரோடு நந்தா பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரிகளில் மென்பொருள் அறிவியல் பொறியியல், தகவல் தொடர்பியல் துறை இறுதி ஆண்டு மாணவர்களுக்கு சிறப்பு வளாகத் தேர்வு அண்மையில் நடைபெற்றது.
நந்தா கல்விக் குழுமத்தின் பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறை சார்பில் நடைபெற்ற இந்நிகழ்ச்சிக்கு ஸ்ரீநந்தா கல்வி அறக்கட்டளை தலைவர் வி.சண்முகன் தலைமை வகித்தார்.
தனியார் நிறுவனத்தின் மனிதவள மேலாளர் செரில் குத்து விளக்கேற்றினார். நந்தா கல்வி நிறுவனங்களின் முதன்மை நிர்வாக அதிகாரி எஸ்.ஆறுமுகம் முன்னிலை வகித்தார்.
அதைத்தொடர்ந்து கணினி மூலம் முதல் சுற்று தேர்வு நடத்தப்பட்டது.
இதில் வெற்றிபெற்ற மாணவர்களுக்கு நேர்காணல் நடைபெறவுள்ளது. இந்நிகழ்ச்சியில் பொறியியல் கல்லூரியின் முதல்வர் என்.ரங்கராஜன், தொழில்நுட்பக் கல்லூரியின் முதல்வர் எம். விஜயகுமார் ஆகியோர் வாழ்த்திப் பேசினர்.
வளாகத் தேர்வுக்கு ஏற்பாடு செய்திருந்த பயிற்சி மற்றும் வேலைவாய்ப்புத் துறையின் ஆசிரியர்களுக்கு நந்தா கல்வி நிறுவனங்களின் செயலர்கள் எஸ்.நந்தகுமார் பிரதீப், எஸ்.திருமூர்த்தி ஆகியோர் வாழ்த்து தெரிவித்தனர்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...