பச்சமலை முருகன் கோயிலில் வில்வ லட்சார்ச்சனை
By DIN | Published On : 19th May 2019 07:17 AM | Last Updated : 19th May 2019 07:17 AM | அ+அ அ- |

கோபி பச்சமலை முருகன் கோயிலில் ஒரு டன் வில்வ இலைகளைக் கொண்டு லட்சார்ச்சனை வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
பச்சமலையில் வைகாசி விசாக திருவிழா, லட்சார்ச்சனை, சத்ரு சம்ஹார ஹோமம் விழா கடந்த 15 ஆம் தேதி தொடங்கியது. கடந்த இரு நாள்களாக தினமும் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரையும், மாலை 4.30 மணி முதல் இரவு 6.30 மணி வரையும் லட்சார்ச்சனை நடைபெற்றது.
மூன்றாவது நாளாக வெள்ளிக்கிழமை நடைபெற்ற நிகழ்வில் ஒரு டன் அளவுக்கு வில்வ இலை கொண்டு வரப்பட்டு, முருகனின் 108 நாமா வழியில் அர்ச்சகர்கள், சிவாச்சாரியார்கள் லட்சார்ச்சனை செய்தனர். அதைத் தொடர்ந்து இரண்டு கால அபிஷேகம் நடை பெற்றது. இதில், கோபி, அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் இருந்து திரளான பக்தர்கள் பங்கேற்று தரிசனம் செய்தனர்.