வைக்கோல் தீவனம் ரூ.90-க்கு விற்பனை
By DIN | Published On : 26th May 2019 03:03 AM | Last Updated : 26th May 2019 03:03 AM | அ+அ அ- |

தடப்பள்ளி அரக்கன்கோட்டை பாசனங்களில் அறுவடையாகும் வைக்கோல் தீவனம் பண்டல் ரூ.90-க்கு விற்பனையாகிறது.
பவானிசாகர் அணையில் திறக்கப்படும் தண்ணீர், கொடிவேரி தடுப்பணையில் தடுத்து தடப்பள்ளி மற்றும் அரக்கன்கோட்டை வாய்க்கால் மூலம் மொத்தம் 24,504 ஏக்கர் நிலம் பாசனம் பெறுகிறது. தற்போது இரு பாசனங்களிலும் இரண்டாம்போக அறுவடை பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது. கடந்த சில ஆண்டுகளாக கூலி ஆள்கள் பற்றாக்குறையால் இயந்திரம் மூலம் நெல் அறுவடைப் பணிகள் நடைபெறுகிறது. இவை தீவனத்துக்கு மட்டுமின்றி பார்சல், பேக்கிங் பணிக்கும் வியாபாரிகள் வாங்கிச் செல்கின்றனர்.
தண்ணீர் பற்றாக்குறை மற்றும் மழையின்றி இரண்டாம் போக நெல் சாகுபடி எதிர்பார்த்தளவு இல்லை. இதனால் அறுவடைக்கு முன்பு பல வயல்களில் நெற்கதிர் மண்ணோடு சாய்ந்தன.
வைக்கோலுக்கும் போதிய விலை கிடைக்கவில்லை. தற்போது வைக்கோல் பண்டல் ரூ.80 முதல் ரூ.90 வரை விலை போகிறது. கடந்த போகத்தில் ரூ.100 முதல் ரூ.110 வரை விற்பனையானது.