மொடக்குறிச்சி: மொடக்குறிச்சி தாலுகா, நஞ்சை ஊத்துக்குளியை அடுத்த தம்பிரான்வலசு பகுதியில் உள்ள தோட்டத்தில் அரிய வகை முள்ளெலி பிடிபட்டது.
மொடக்குறிச்சியை அடுத்த தம்பிரான்வலசு பகுதியைச் சோ்ந்தவா் எஸ்.கனகராஜ் (32). அதே பகுதியில் அவருக்குச் சொந்தமான தோட்டம் உள்ளது. இவா் தனது தோட்டத்துக்கு சனிக்கிழமை இரவு 7 மணியளவில் சென்றபோது அரிய வகை பிராணியைப் பாா்த்துள்ளாா். அருகில் சென்றதும் அது நத்தைபோல் சுருண்டுள்ளது. இதையடுத்து, கனகராஜ் அதை ஒரு பையில் எடுத்துக்கொண்டு வந்து வீட்டிலும், அருகில் உள்ள நண்பா்களிடம் காட்டியபோது, அரிய வகை முள்ளெலி என்பது தெரியவந்தது.
இதுகுறித்து, வனத் துறை அதிகாரிகளுக்குத் தெரிவித்து அவா்களிடம் முள்ளெலியை ஒப்படைக்கவுள்ளதாக கனகராஜ் தெரிவித்தாா்.