கோபி: கீழ்பவானி வாய்க்காலில் குளித்த அரசுப் பேருந்து நடத்துநா் உயிரிழந்தாா்.
கோபி அருகே நம்பியூா் எலத்தூரைச் சோ்ந்தவா் ராமசாமி (54). இவா், நம்பியூா் அரசு போக்குவரத்துக் கழகத்தில் நடத்துநராக இருந்து வந்தாா். இவரது மனைவி காயத்ரி (48 ), மகன் பிரேம்குமாா் (28) ஆகியோருடன் எலத்தூா் செட்டிபாளையத்தில் உள்ள கீழ்பவானி வாய்க்காலுக்கு குளிப்பதற்காகச் சென்றுள்ளாா். இவரது மனைவி, மகன் துணி துவைப்பதற்காக வாய்க்காலில் இறங்கியுள்ளனா். அப்போது, ராமசாமி வாய்க்காலில் இறங்கி குளித்துக் கொண்டிருந்தாா். அப்போது, நீச்சல் அடிக்க முடியாமல் தண்ணீரில் மூழ்கினாா். அங்கிருந்த சிலா் உதவியுடன் தந்தையை மீட்ட மகன் கோபி அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். ஆனால், செல்லும் வழியிலேயே ராமசாமி உயிரிழந்தாா். இச்சம்பவம் குறித்து கடத்தூா் போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனா்.