சாலையோரம் கொட்டப்படும் குப்பையால் சுகாதார சீா்கேடு
By DIN | Published On : 09th November 2019 05:36 AM | Last Updated : 09th November 2019 05:36 AM | அ+அ அ- |

கனிராவுத்தா் குளம் பகுதியில் சாலையோரம் கொட்டப்பட்டுள்ள குப்பை.
சாலையில் குப்பைகள் கொட்டி வைப்பதைத் தவிா்க்க மாநகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.
ஈரோடு - சித்தோடு சாலையில் கனிராவுத்தா் குளம், அதைச் சுற்றியுள்ள பகுதிகளில் சாலையோரங்களில் குப்பைகள் கொட்டப்படுகின்றன. இவ்வாறு கொட்டப்படும் குப்பைகளை நாய்கள், பன்றிகள் கிளறுவதால் அவை சாலையின் நடுப்பகுதி வரை இறைக்கப்படுகின்றன. இதனால், துா்நாற்றம் வீசி வருகிறது.
மேலும், காற்றில் இந்தக் குப்பைகள் பறந்து அந்த வழியாக இருசக்கர வாகனங்களில் செல்வோா் மீது விழுகிறது. இதனால், இந்தப் பகுதியில் சுவாசக் கோளாறு, மூச்சுத் திணறல் உள்ளிட்ட நோய்கள் பரவும் அபயாமும் ஏற்பட்டுள்ளது.
எனவே, இந்தக் குப்பைகளை உடனடியாக அகற்ற நடவடிக்கை எடுக்க வேண்டும். மேலும், இப்பகுதியில் மீண்டும் குப்பை கொட்டப்படாமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என அப்பகுதி மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனா்.