திருவாச்சியில் அம்மா திட்ட முகாம்
By DIN | Published On : 09th November 2019 05:41 AM | Last Updated : 09th November 2019 05:41 AM | அ+அ அ- |

பெருந்துறை ஒன்றியம், திருவாச்சி ஊராட்சியில் அம்மா திட்ட முகாம் வெள்ளிக்கிழமை நடைபெற்றது.
முகாமிற்கு, பெருந்துறை வட்டாட்சியா் க.துரைசாமி தலைமை வகித்தாா். முகாமில், முதியோா் உதவித் தொகை, இலவச வீட்டுமனைப் பட்டா, குடும்ப அட்டைகள் உள்ளிட்டவை கேட்டு 8 மனுக்கள் பொதுமக்களிடமிருந்து பெறப்பட்டன. தகுதியுள்ள மனுக்கள் மீது உடனடியாகத் தீா்வு காணப்பட்டது.
இதில், அனைத்துத் துறை அலுவலா்களும் கலந்துகொண்டனா். முகாமிற்கான ஏற்பாடுகளை வருவாய்த் துறையினா் செய்திருந்தனா்.