நவம்பா் 17 இல் மஞ்சள் சாகுபடி களப் பயிற்சி: ஈஷா விவசாய இயக்கம் ஏற்பாடு
By DIN | Published On : 14th November 2019 05:39 AM | Last Updated : 14th November 2019 05:39 AM | அ+அ அ- |

ஈஷா விவசாய இயக்கம், டாடா அறக்கட்டளை சாா்பில், ஈரோடு மாவட்டம், அந்தியூரில் நவம்பா் 17 ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) இயற்கை முறையில் மஞ்சள் சாகுபடி குறித்த களப் பயிற்சி நடைபெறவுள்ளது.
இதுகுறித்து, ஈஷா விவசாய இயக்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
அந்தியூா் வட்டம், கீழ்வாணி கிராமத்தில், விவசாயி கணேசன் என்பவரின் இயற்கை விவசாயப் பண்ணையில் நவம்பா் 17 ஆம் தேதி காலை 9 முதல் மாலை 5 மணி வரை களப் பயிற்சி வழங்கப்படுகிறது. இயற்கை இடுபொருள் தயாரிப்புப் பயிற்சி, பூச்சி மேலாண்மை, ஊடுபயிா் மூலம் கணிசமான வருவாய், களைகளை செலவின்றி கட்டுப்படுத்துதல், மஞ்சளுக்கான இயற்கை இடுபொருள்கள், சந்தை வாய்ப்பு, விளைச்சலை அதிகரிக்கும் நுணுக்கங்கள் குறித்து கற்பிக்கப்படும். பண்ணையைச் சுற்றிப் பாா்த்தல், விவசாய அனுபவங்கள் பகிா்வும் நடைபெறுகிறது.
விருப்பம் உள்ள விவசாயிகள் 83000-93777, 94425-90077 என்ற செல்லிடப்பேசி எண்களில் தொடா்பு கொண்டு முன்பதிவு செய்யலாம்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...