பூதப்பாடியில் ரூ. 19.02 லட்சத்துக்கு விளைபொருள்கள் ஏலம்
By DIN | Published On : 14th November 2019 05:43 AM | Last Updated : 14th November 2019 05:43 AM | அ+அ அ- |

பவானியை அடுத்த பூதப்பாடி ஒழுங்குமுறை விற்பனைக் கூடத்தில் ரூ. 19.02 லட்சத்துக்கு வேளாண்மை விளைபொருள்கள் ஏலம் செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
இங்கு, 5,988 தேங்காய்கள் விற்பனைக்கு வந்ததில் சிறியவை ரூ. 6.50 முதல் பெரியவை ரூ. 16.20 வரையில் என மொத்தம் ரூ. 57,242 க்கும், 33 மூட்டைகள் தேங்காய் கொப்பரை கிலோ ரூ. 69.76 முதல் ரூ. 91.60 வரையில் என ரூ. 41,777 க்கும் ஏலம் போயின. 680 மூட்டைகள் நிலக்கடலை கிலோ ரூ. 44 முதல் ரூ. 57.91 வரையில் என ரூ. 12,00,005 க்கும், 97 மூட்டைகள் நெல் கிலோ ரூ. 12 முதல் ரூ. 24.01 வரையில் என ரூ. 1,45,719 க்கும், 77 மூட்டைகள் எள் கிலோ ரூ. 80.20 முதல் ரூ. 121.09 வரையில் என ரூ. 4,58,129 க்கும் விற்பனையாயின.
இங்கு 262 விவசாயிகள் கொண்டு வந்த 887 மூட்டைகள் 406.80 குவிண்டால் வேளாண் விளைபொருள்கள் மொத்தமாக ரூ. 19,02,922 க்கு ஏலம் போயின.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...