பெருந்துறையில் அடர்வனம் அமைக்கும் பணி தொடக்கம்
By DIN | Published On : 01st September 2019 06:50 AM | Last Updated : 01st September 2019 06:50 AM | அ+அ அ- |

பெருந்துறை பேரூராட்சிக்கு உள்பட்ட 10 ஆவது வார்டு, தோப்புப்பாளையம், ஐஸ்வர்யா நகரில், பெருந்துறை பேரூராட்சி, இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றம் சார்பில் அடர்வனம் அமைக்க 1,000 மரக்கன்றுகள் நடும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
விழாவுக்கு, பெருந்துறை போரூராட்சி செயல் அலுவலர் எஸ்.டி.கணேசன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி. வெங்கடாச்சலம் பங்கேற்று மரக்கன்றுகளை நட்டு விழாவைத் தொடங்கி வைத்தார்.
இதில், இளைய பாரதம் இளைஞர் நற்பணி மன்றம் பி.எம்.ஆர்.சக்திசுரேஷ், கொல்லம் டிரான்ஸ்போர்ட் உரிமையாளர் பழனிசாமி, பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன், வேளாண்மை கூட்டுறவு விற்பனைச் சங்க துணைத் தலைவர் டி.டி.ஜெகதீஸ் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.