அந்தியூர் அருகே உடும்பு இறைச்சி வைத்திருந்த இருவர் கைது
By DIN | Published On : 02nd September 2019 05:05 AM | Last Updated : 02nd September 2019 05:05 AM | அ+அ அ- |

அந்தியூர் அருகே உடும்பு இறைச்சி வைத்திருந்திருந்ததாக இருவரை வனத் துறையினர் ஞாயிற்றுக்கிழமை கைது செய்தனர்.
அந்தியூரை அடுத்த அத்தாணி கரும்பாறை தொட்டகோம்பை வனப் பகுதியில் வனத் துறை அதிகாரிகள் சோதனையில் ஈடுபட்டபோது, அவ்வழியாக இருசக்கர வாகனத்தில் வந்த இருவரை தடுத்து நிறுத்தி விசாரணை நடத்தினர்.
அப்போது, வனப் பகுதியில் உடும்பு வேட்டையாடி, துண்டு துண்டாக வெட்டி இறைச்சியைக் கொண்டு சென்றது தெரியவந்தது. விசாரணையில், புஞ்சை துரையம்பாளையம், எருமைக்குட்டையைச் சேர்ந்த மாறன் (55), நடராஜ் (37) என்பது தெரியவந்தது.
இதையடுத்து, உடும்பு இறைச்சி மற்றும் வேட்டைக்குப் பயன்படுத்தப்பட்ட உபகரணங்களை பறிமுதல் செய்த வனத் துறையினர் இருவரையும் கைது செய்தனர்.