அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலையில்லா செல்லிடப்பேசி
By DIN | Published On : 11th September 2019 06:48 AM | Last Updated : 11th September 2019 06:48 AM | அ+அ அ- |

பெருந்துறை சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட 108 அங்கன்வாடி பணியாளர்களுக்கு பிரதம மந்திரியின் போஷன் அபியான் திட்டத்தின்கீழ், தமிழ்நாடு சமூக நலம் சத்துணவு திட்டத் துறையின், ஒருங்கிணைந்த குழந்தைகள் வளர்ச்சிப் பணிகள் திட்டம் மூலம் விலையில்லா செல்லிடப்பேசி வழங்கும் விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.
பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் ஆ.மோகனவித்யா தலைமை வகித்தார். மொடக்குறிச்சி சட்டப் பேரவை உறுப்பினர் வி.பி.சிவசுப்பிரமணி முன்னிலை வகித்தார். பெருந்துறை சட்டப் பேரவை உறுப்பினர் தோப்பு என்.டி.வெங்கடாச்சலம், 108 அங்கன்வாடி பணியாளர்களுக்கு விலையில்லா செல்லிடப்பேசிகள் வழங்கினார்.
இதில், பெருந்துறை ஒன்றிய அதிமுக செயலாளர் விஜயன், குழந்தைகள் வளர்ச்சித் திட்ட மேற்பார்வையாளர்கள் திலகவதி, அன்புச்செல்வி, மல்லிகா, தமிழரசி, கிருஷ்ணவேணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.