மொஹரம் பண்டிகையை முன்னிட்டு ஈரோடு மாவட்டத்தில் மஞ்சள் ஏலம் புதன்கிழமை (செப்டம்பர் 11) நடைபெறாது என அறிவிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு பகுதியில் ஈரோடு, பெருந்துறை ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்கள், ஈரோடு, கோபி கூட்டுறவு விற்பனைச் சங்கங்கள் என நான்கு இடங்களில் திங்கள்கிழமை முதல் வெள்ளிக்கிழமை வரை மஞ்சள் ஏலம் நடைபெறுகிறது.
மொஹரம் பண்டிகையை முன்னிட்டு புதன்கிழமை ஒரு நாள் மட்டும் மஞ்சள் ஏலத்துக்கு விடுமுறை விடப்படுகிறது. வியாழக்கிழமை வழக்கம்போல ஏலம் நடைபெறும் என ஒழுங்கு முறை விற்பனைக் கூடங்கள், கூட்டுறவு விற்பனைச் சங்கங்களின் நிர்வாகங்கள் வெளியிட்ட அறிவிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.