வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு
By DIN | Published On : 11th September 2019 06:45 AM | Last Updated : 11th September 2019 06:45 AM | அ+அ அ- |

சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி இடமாற்றத்தைக் கண்டித்து ஈரோடு மாவட்டத்தில் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டனர்.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக உள்ள வி.கே.தஹில் ரமணியை மேகாலயா மாநில தலைமை நீதிபதியாகவும், தற்போதைய மேகலாய மாநில தலைமை நீதிபதியாக உள்ள ஏ.கே.மிட்டலை சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும் மாற்ற முடிவு செய்த உச்ச நீதிமன்ற கொலிஜீயம் மத்திய அரசுக்குப் பரிந்துரை அனுப்பியுள்ளது.
இந்நிலையில், தலைமை நீதிபதியின் இடமாற்றத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி தமிழகம் முழுவதும் வழக்குரைஞர்கள் நீதிமன்ற புறக்கணிப்பு போராட்டத்தில் செவ்வாய்க்கிழமை ஈடுபட்டனர்.
ஈரோட்டில் 800 வழக்குரைஞர்களும், கோபி, சத்தி, பெருந்துறை, பவானி, கொடுமுடி என மாவட்டத்தில் உள்ள அனைத்து நீதிமன்றங்களிலும் சுமார் 1,700 வழக்குரைஞர்களும் நீதிமன்ற புறக்கணிப்பில் ஈடுபட்டதாக வழக்குரைஞர்கள் சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.