கூட்டுப் பண்ணை விவசாயிகளுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி
By DIN | Published On : 22nd September 2019 05:12 AM | Last Updated : 22nd September 2019 05:12 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சி வட்டாரத்தில் உள்ள எரப்பம்பாளையம் கிராமத்தில் வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மை முகமைத் திட்டத்தின்கீழ் வேளாண்மைத் துறை சார்பில் திறன் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.
இப்பயிற்சியில் மொடக்குறிச்சி வட்டார தொழில்நுட்ப மேலாளர் கோமதி வேளாண்மை தொழில்நுட்ப மேலாண்மைத் திட்டங்கள் குறித்தும், உழவர் உற்பத்தியாளர் நிறுவனம் அமைத்தல், தொழில் தொடங்குவதால் உண்டாகும் நன்மைகள் குறித்தும் பேசினார்.
தொழில்நுட்பப் பயிற்சியாளர் கோபி ஆனந்தன் தென்னை, வாழை, நெல்லி, காளான் போன்ற பொருள்களில் இருந்து மதிப்பு கூட்டுதல், பொருள்கள் தயாரிக்கும் முறைகள், மதிப்பு கூட்டுதல் பொருள்களின் வகைகள், சந்தைப்படுத்துதல் குறித்து விவசாயிகளுக்கு விளக்கம் அளித்தார். மண்புழு உழவர் உற்பத்தியாளர் நேரு மல்லிகா மண்புழு உரம் தயாரிப்பு குறித்துப் பேசினார். இப்பயிற்சியில் உழவர் உற்பத்தியாளர் குழு தலைவர் சுப்பிரமணி, ஆர்வலர் குழு தலைவர் தண்டபாணி உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.