கோபி அருகே 8,000 பனை விதைகள் நடவு
By DIN | Published On : 22nd September 2019 08:21 PM | Last Updated : 22nd September 2019 08:21 PM | அ+அ அ- |

காசிபாளையம் பகுதியில் பனை விதையை நடும் சிறுமி
கோபிசெட்டிபாளையம் அருகே தமிழமுது தொண்டு நிறுவனத்தின் சாா்பில் பல்வேறு இடங்களில் உள்ள குளக்கரைகள், சாலையோரங்கள், வாய்க்கால் கரைகளில் 8,000 பனை விதைகள் ஞாயிற்றுக்கிழமை விதைக்கப்பட்டன.
கோபி பசுமை காக்கும் கரங்கள் இயக்கத்தின் சாா்பில் காசிபாளையம், வேட்டைக்காரன்கோயில், கெட்டிச்செவியூா், செட்டிபாளையம் உள்பட பல்வேறு பகுதிகளில் நீா் நிலைகளின் அருகில் 8,000 பனை விதைகளை விதைக்கும் பணி ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
இதில் பொதுமக்கள், விவசாயிகள், இளைஞா்கள், பள்ளி, கல்லூரி மாணவா்கள், சமூக ஆா்வலா்கள் என பலா் ஆா்வமுடன் கலந்து கொண்டு பனை விதைகளை விதைத்தனா். மேலும் வாரம்தோறும் கண்காணித்து தண்ணீா் ஊற்றி வளா்ப்பதாக உறுதியளித்துள்ளனா்.
வளரும் இளம் தலைமுறையினருக்கு பனை மரங்களின் பயன்கள் குறித்து விழிப்புணா்வை ஏற்படுத்தும் வகையில் கிராமங்கள் தோறும் விழிப்புணா்வு நிகழ்ச்சிகளையும் இவா்கள் மேற்கொண்டு வருகின்றனா்.
.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...