மொடக்குறிச்சியில் அடுத்தடுத்த வீடுகளில் திருட்டு
By DIN | Published On : 29th September 2019 12:30 AM | Last Updated : 29th September 2019 12:30 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சியில் அடுத்தடுத்த வீடுகளில் பூட்டை உடைத்து பணம், 4 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச் சென்றது குறித்து போலீஸார் விசாரித்து வருகின்றனர்.
மொடக்குறிச்சி வட்டார வளர்ச்சி அலுவலகம் எதிர்புறம் வசித்து வருபவர் கெளரிசங்கர்(38). தனியார் பால் பண்ணையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மனைவி புவனேஸ்வரி தனது தாய் வீட்டுக்குச் சென்றுவிட்டார்.
இந்நிலையில், கெளரிசங்கர் இரவுப் பணிக்கு வெள்ளிக்கிழமை சென்றுவிட்டார். சனிக்கிழமை பணி முடிந்து வீட்டுக்கு வந்தபோது, வீட்டின் கதவு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது பீரோவில் இருந்த ஒன்றரை பவுன் தங்கச் சங்கிலி இரண்டும், அரை பவுன் மோதிரங்கள் உள்பட நான்கு பவுன் நகைகள் திருடப்பட்டிருப்பதும் தெரியவந்தது.
கௌரிசங்கர் வீட்டிற்கு அருகில் உள்ள மற்றொரு வீட்டில் வசித்து வருபவர் பாப்பாத்தி (60). இவரது இரு மகள்களுக்கும் திருமணம் ஆகிவிட்டதால் தனியாக வசித்து வருகிறார். கடந்த ஒரு மாதத்துக்கு முன்பு சென்னையில் உள்ள தனது மகள் வீட்டுக்குச் சென்றுவிட்டார். இதை நோட்டமிட்ட திருடர்கள் இவரது வீட்டிலும் பூட்டை உடைத்து ரூ. 3000 பணத்தை திருடிச் சென்றதும் தெரியவந்தது.
கெளரிசங்கர் அளித்த புகாரின்பேரில், மொடக்குறிச்சி காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.