ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் லட்சார்ச்சனை
By DIN | Published On : 29th September 2019 12:29 AM | Last Updated : 29th September 2019 12:29 AM | அ+அ அ- |

மொடக்குறிச்சியை அடுத்த கஸ்பாபேட்டை ஸ்ரீ வரதராஜப் பெருமாள் கோயிலில் புரட்டாசி சனிக்கிழமை, அமாவாசையையொட்டி நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டனர்.
கஸ்பாபேட்டை ஸ்ரீ வரதராஜ பெருமாள் கோயிலில் நடைபெற்ற லட்சார்ச்சனை விழாவில், சனிக்கிழமை காலை 5 மணிக்கு ஸ்ரீதேவி பூதேவி சமேத ஸ்ரீ வரதராஜ பெருமாளுக்கு விசேஷ திருமஞ்சனம், அபிஷேகம், 108 புஷ்பங்களால் அலங்காரம், சிறப்பு பூஜை ஆகியன நடைபெற்றன.
தொடர்ந்து, காலை 7 மணி முதல் லட்சார்ச்சனை விழா தொடங்கியது. திருப்பதி தேவஸ்தான பட்டர்கள் பங்குபெற்ற இந்த லட்சார்ச்சனையில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு சுவாமி தரிசனம் செய்தனர்.
லட்சார்ச்சனை விழா மாலை 6 மணிக்கு நிறைவுபெற்று, தீபாராதனை நடைபெற்றது.