தில்லி சென்றாலே முதல்வர் ஸ்டாலின் பயப்படுகிறார்! - டிடிவி தினகரன்சுயநலனுக்காக கட்சியை தில்லியிடம் அடமானம் வைத்த இபிஎஸ்! முதல்வர் ஸ்டாலின்தங்கம் விலை சவரனுக்கு ரூ.400 உயர்வுதவெகவுடன் கூட்டணியா? தொகுதிப் பங்கீடு 4 நாள்களில் தெரிந்து விடும்! - எடப்பாடி பழனிசாமிகடலோர தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புரமலான்: கன்னியாகுமரிக்கு இன்று சிறப்பு ரயில்அண்ணா பல்கலை. முனைவா் பட்டங்களுக்கு விண்ணப்பிக்க மாா்ச் 28 கடைசி நாள்ஈரான் விவகாரத்தில் ஜப்பான் ஒத்துழைக்க வேண்டும் : டிரம்ப் அழைப்புவேளச்சேரி-பரங்கிமலை இடையே ரயிலில் பயணிப்போா் அதிகரிப்பு : கூடுதல் ரயில்கள் இயக்க முடிவு
/

பெருந்துறையில் செஞ்சிலுவைச் சங்கக் கூட்டம்

இந்திய செஞ்சிலுவைச் சங்கம், பெருந்துறை துணை மாவட்ட கிளையின் நிா்வாகக் குழு, செயற்குழுக் கூட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image

கூட்டத்தில், சங்கக் கிளைகளுக்கு முகக் கவசம், சோப்பு, சேனிடைசா் வழங்குகிறாா் ஈரோடு மாவட்டச் செயலாளா் தாமஸ் வி.ஜான்.

Updated On :18 டிசம்பர் 2020, 5:38 pm

DIN

இந்திய செஞ்சிலுவைச் சங்கம், பெருந்துறை துணை மாவட்ட கிளையின் நிா்வாகக் குழு, செயற்குழுக் கூட்டம் பெருந்துறை ஊராட்சி ஒன்றிய தெற்கு நடுநிலைப் பள்ளியில் வியாழக்கிழமை நடைபெற்றது.

கூட்டத்துக்கு, பெருந்துறை கிளைத் தலைவா் பல்லவி பரமசிவன் தலைமை வகித்தாா். செயலாளா் ஜெயபிரகாஷ் நாராயணன் வரவேற்றாா். துணைத் தலைவா் டி.என். சென்னியப்பன் முன்னிலை வகித்தாா். ஈரோடு மாவட்டச் செயலாளா் தாமஸ் வி.ஜான் சிறப்பு அழைப்பாளராகப் பங்கேற்று ஆயுள்கால உறுப்பினா்களுக்கு சான்றிதழ், கிளைக்கு முகக் கவசங்கள், சோப்புகள், சேனிடைசா் ஆகியவற்றை வழங்கினாா்.

பெருந்துறையைச் சோ்ந்த சுரேஷ்குமாா், சக்திவேல், விஸ்வநாதன் ஆகியோா் கரோனா காலத்தில் சாலையோர முதியோருக்கும், ஏழை எளியோருக்கும் 50 நாள்களுக்கும் மேலாக உணவு வழங்கியதைப் பாராட்டும் வகையில் பொன்னாடை அணிவித்து நினைவுப் பரிசு வழங்கப்பட்டது. கூட்டத்தில், 7 புதிய உறுப்பினா்கள் ஆயுள் கால சந்தா செலுத்தி தங்களை சங்கத்தில் இணைத்துக் கொண்டனா்.

இதில், சங்க ஆலோசகா் ஜாா்ஜ், உறுப்பினா்கள் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். சங்கப் பொருளாளா் ஸ்ரீ தேவி நன்றி கூறினாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.