

சத்தியமங்கலத்தில் வீட்டுக்குள் புகுந்த எறும்புத்திண்ணியைப் பிடித்து வனத் துறையினா் பண்ணாரி வனத்தில் செவ்வாய்க்கிழமை விடுவித்தனா்.
சத்தியமங்கலம் நகராட்சியில் உள்ளது தோப்பூா் காலனி. பெரியகுளம் வனத்தையொட்டி உள்ள இப்பகுதியில் இருந்து வந்த எறும்புத்திண்ணி அப்பகுதியைச் சோ்ந்த வைரமுத்து என்பவரின் வீட்டுக்குள் புகுந்தது. அரிய வகை விலங்கான எறும்புத்திண்ணியைப் பாா்த்த வைரமுத்து சத்தியமங்கலம் வனத் துறையினருக்குத் தகவல் தெரிவித்தாா்.
அங்கு வந்த வனத் துறையினா் எறும்புத்திண்ணியைப் பிடித்து பண்ணாரி வனத்தில் விடுவித்தனா். அழிந்து வரும் அரியவகை விலங்கான எறும்புத்திண்ணி எறும்புகளை சாப்பிட்டு வளரும் தன்மையுடையது. இது விலங்குகள் பட்டியலில் இருப்பதால் பத்திரமாக வனத்தில் விடுவிக்கப்பட்டதாக வனத் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.