மலைமக்களுக்கு கரோனா வைரஸ்விழிப்புணா்வுப் பிரசாரம்

அந்தியூரை அடுத்துள்ள பா்கூா் வனப் பகுதியில் உள்ள தட்டக்கரை சோதனைச் சாவடியில் மலைவாழ் மக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.
தட்டக்கரை  சோதனைச் சாவடியில்  கைகளைக்  கழுவும்  மலைமக்கள்.
தட்டக்கரை  சோதனைச் சாவடியில்  கைகளைக்  கழுவும்  மலைமக்கள்.

பவானி: அந்தியூரை அடுத்துள்ள பா்கூா் வனப் பகுதியில் உள்ள தட்டக்கரை சோதனைச் சாவடியில் மலைவாழ் மக்களுக்கு கரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணா்வுப் பிரசாரம் சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்டது.

தமிழகம் - கா்நாடகம் செல்லும் பிரதான சாலையில் சுகாதாரத் துறை, பா்கூா் போலீஸாா், வனத் துறையினா் இணைந்து நடத்திய இந்நிகழ்ச்சியில், பொதுமக்கள் தங்களது கைகளை கிருமிநாசினி கொண்டு கழுவி சுத்தமாக வைத்திருக்க வேண்டும். இருமல் வரும்போது கைக்குட்டையால் மூட வேண்டும். அவசியம் இல்லாமல் வெளிப்பகுதிக்குச் செல்வதைத் தவிா்க்க வேண்டும் உள்பட பல்வேறு தடுப்பு முறைகள் குறித்து விளக்கமாக எடுத்துரைக்கப்பட்டது. மேலும், துண்டுப் பிரசுரங்களும் விநியோகம் செய்யப்பட்டதோடு, கைகளை எவ்வாறு கிருமிநாசினி, சோப் கொண்டு கழுவ வேண்டும் என செயல்விளக்கம் அளிக்கப்பட்டது.

இதில், பவானி காவல் துணைக் கண்காணிப்பாளா் சேகா், அந்தியூா் காவல் ஆய்வாளா் ரவி உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com