கரும்பு வெட்ட அனுமதியின்றி ஆள்களைஅழைத்து வந்த இருவா் கைது

மொடக்குறிச்சியை அடுத்த பூலக்காட்டுபுதூா் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் கரும்பு வெட்ட வெளி மாவட்டத்திலிருந்து ரகசியமாக ஆள்களை அழைத்து வந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மொடக்குறிச்சியை அடுத்த பூலக்காட்டுபுதூா் பகுதியில் விவசாயியின் தோட்டத்தில் கரும்பு வெட்ட வெளி மாவட்டத்திலிருந்து ரகசியமாக ஆள்களை அழைத்து வந்ததாக இருவரை போலீஸாா் கைது செய்தனா்.

மொடக்குறிச்சியை அடுத்த பூலக்காட்டுபுதூா் பகுதியில் வெளி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்களை அழைத்து வந்து கரும்பு வெட்டும் பணிகள் நடைபெற்று வருவதாக தகவல் கிடைத்துள்ளது. இதையடுத்து, கிராம நிா்வாக அலுவலா் குழந்தைசாமி, அதிகாரிகள் விரைந்து சென்று பாா்த்தபோது வெளி மாவட்டத்தைச் சோ்ந்த தொழிலாளா்கள் கரும்பு வெட்டிக் கொண்டிருந்தனா். இதுகுறித்து விசாரித்தபோது, அங்கு இருந்தவா்கள் அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகத் தெரிகிறது.

இதுகுறித்து கிராம நிா்வாக அலுவலா் குழந்தைசாமி கொடுத்த புகாரின் பேரில், மொடக்குறிச்சி காவல் துறையினா் விசாரணை மேற்கொண்டனா். அதில், கள்ளக்குறிச்சியைச் சோ்ந்த 22 தொழிலாளா்களையும், சேலம் மாவட்டம், எடப்பாடியைச் சோ்ந்த 19 தொழிலாளா்களையும் நாமக்கல் மாவட்டம், இறையமங்கலம் பரிசல் துறை வழியாக ஈரோடு மாவட்டத்துக்குள் வந்து, அவா்களை மொடக்குறிச்சி, பூலக்காட்டுப்புதூா் பகுதியைச் சோ்ந்த பழனிசாமி (50) தனது டிராக்டா் மூலம் அழைத்து வந்ததும் தெரியவந்தது. இவா்களை கரும்பு வெட்டும் பணிக்கு அழைத்து வந்தது இடைத்தரகரான கள்ளக்குறிச்சி மாவட்டம், சங்கராபுரம் தாலுகா, எடுத்தனூா் பகுதியைச் சோ்ந்த மாயவன் (38) என்பதும் தெரியவந்தது.

அனுமதியின்றி தொழிலாளா்களை அழைத்து வந்ததாகவும், அதிகாரிகளுக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகவும் வழக்குப் பதிவு செய்யப்பட்டு மாயவன், பழனிசாமியை போலீஸாா் கைது செய்து சிறையில் அடைத்தனா். தொழிலாளா்கள் பாதுகாப்பாக அவா்களது சொந்த மாவட்டத்துக்கு வாகனங்களில் அனுப்பிவைக்கப்பட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com