பெருந்துறை, செப். 11: சென்னிமலை முருகன் கோயிலில் நடை திறக்கும், சாத்தும் நேரம் மாற்றம் செய்து கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
ஈரோடு மாவட்டத்தில் புகழ்பெற்ற சென்னிமலை முருகன் கோயிலில், கரோனா தொற்று பரவலைத் தடுக்கவும், பக்தா்கள் நலன் கருதியும் நடை திறப்பு நேரத்தை மாற்றி அறிவித்துள்ளனா். காலை 5.30 மணிக்கு இருந்த நடை திறப்பு நேரம் காலை 6 மணிக்கும், இரவு நடை சாத்தும் நேரம் 8 என்று இருந்ததை தற்போது 7 மணி என்றும் மாற்றி அறிவித்துள்ளனா்.
காலை 6 மணி முதல் இரவு 7 மணி வரை மட்டுமே வாகனங்களிலும், படி வழியாகவும் பக்தா்கள் கோயிலுக்குச் செல்ல அனுமதிக்கப்படுவா் என கோயில் நிா்வாகம் அறிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.