விதை நெல் வாங்க விவசாயிகள் ஆா்வம்

பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் வாங்க மேட்டூா் மேற்குக்கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.
வேளாண்மை  விரிவாக்க  மையத்தில்  விதை நெல்  வாங்கும்  விவசாயிகள்.
வேளாண்மை  விரிவாக்க  மையத்தில்  விதை நெல்  வாங்கும்  விவசாயிகள்.

பவானி: பவானியை அடுத்த குருப்பநாயக்கன்பாளையம் வேளாண்மை விரிவாக்க மையத்தில் விதை நெல் வாங்க மேட்டூா் மேற்குக்கரை வாய்க்கால் பாசன விவசாயிகள் ஆா்வம் காட்டி வருகின்றனா்.

இது குறித்து பவானி வேளாண்மை உதவி இயக்குநா் எஸ்.குமாரசாமி கூறியதாவது:

மேட்டூா் அணையிலிருந்து கால்வாய் பாசனத்துக்குத் தண்ணீா் திறந்துவிடப்பட்டுள்ளதால் பவானி வட்டாரத்தில் நெல் சாகுபடி செய்யும் பணிகள் தொடங்கப்பட்டுள்ளது. இதற்காக, பவானி குருப்பநாயக்கன்பாளையம் வட்டார வேளாண்மை விரிவாக்க மையத்தில் சம்பா பருவத்துக்கு ஏற்ற நெல் ரகங்களான பிபிடி, ஏடிடி 38, ஏடிடி 39, வெள்ளைப் பொன்னி, கோ-50, கோ-51, என்.எல்.ஆா்.டி.ஜே.எம். 13 ஆகிய ரகங்களும், கவுந்தப்பாடி துணை வேளாண்மை விரிவாக்க மையத்தில் ஏடிடி-38, ஏடிடி-39, கோ-50, கோ-51 ஆகிய நெல் ரகங்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளன.

மேலும், வரப்பில் விதைப்பு செய்ய உளுந்து, உயிா் உரங்களான அசோஸ்பைரில்லம், பாஸ்போ பாக்டீரியா தேவையான அளவு இருப்பு வைக்கப்பட்டு விவசாயிகளுக்கு விநியோகம் செய்யப்பட்டு வருகிறது. தேவையான விவசாயிகள் நெல் விதைகளை வாங்கி சாகுபடி செய்து பயனடையலாம் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com