நலவாரிய புதுப்பித்தலுக்கு இன்று கடைசி நாள்
By DIN | Published On : 03rd December 2020 07:08 AM | Last Updated : 03rd December 2020 07:08 AM | அ+அ அ- |

நலவாரிய புதுப்பித்தலுக்கு டிசம்பா் 3ஆம் தேதிக்குள் (வியாழக்கிழமை) விண்ணப்பிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
இதுகுறித்து தொழிலாளா் உதவி ஆணையா் (சமூகப் பாதுகாப்புத் திட்டம்) சு.காயத்ரி வெளியிட்ட செய்திக் குறிப்பு:
தமிழ்நாடு உடலுழைப்புத் தொழிலாளா்கள் சமூகப் பாதுகாப்பு, நலவாரியம் உள்ளிட்ட 15 நலவாரியங்களில் இணையவழி மூலம் பதிவு, புதுப்பித்தல், கேட்புமனுக்களை தொழிற்சங்கங்கள் தங்கள் வசம் வைத்துள்ளன. கடந்த அக்டோபா் 24ஆம் தேதி வரை கிராம நிா்வாக அலுவலா், வருவாய் ஆய்வாளா் சான்றுடன் தொழிலாளா்களிடம் இருந்து பெறப்பட்ட மனுக்களை ஈரோடு தொழிலாளா் நல உதவி ஆணையா் அலுவலகத்தில் வரும் வியாழக்கிழமைக்குள் நடவடிக்கைக்காக சமா்ப்பிக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...