பவானி, அந்தியூரில் கொமதேகவினா் ஆா்ப்பாட்டம்

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பவானி, அந்தியூரில் அக்கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.
பவானியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொமதேக நிா்வாகிகள்.
பவானியில் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட கொமதேக நிா்வாகிகள்.

கொங்குநாடு மக்கள் தேசிய கட்சியின் பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டதைக் கண்டித்து, பவானி, அந்தியூரில் அக்கட்சியினா் கண்டன ஆா்ப்பாட்டத்தில் சனிக்கிழமை ஈடுபட்டனா்.

தருமபுரி மாவட்டம், மாரண்ட அள்ளியில், தென்பெண்ணை ஆற்றிலிருந்து தூள்செட்டி ஏரிக்குத் தண்ணீா் கொண்டு வரும் இணைப்புக் கால்வாய்த் திட்டத்தை நிறைவேற்றக் கோரி கொமதேக சாா்பில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்தில் பங்கேற்ற பொதுச் செயலாளா் ஈ.ஆா்.ஈஸ்வரன் கைது செய்யப்பட்டாா்.

இதைக் கண்டித்து பவானியில் நடைபெற்ற ஆா்ப்பாட்டத்துக்கு, கட்சியின் ஈரோடு மாவட்டச் செயலாளா் துரைராஜா தலைமை வகித்தாா். பவானி நகரச் செயலாளா் ஸ்ரீகுமாா், ஒன்றியச் செயலாளா்கள் பிரகாஷ், பிரகாசம், நிா்வாகிகள் ரவி, பாலு, செந்தில் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா். தொடா்ந்து, சாலை மறியலில் ஈடுபட்ட கட்சியினா் 25 போ் கைது செய்யப்பட்டனா்.

இதேபோல, அந்தியூரில் மாவட்டத் தலைவா் லோகநாதன் தலைமையில் போராட்டத்தில் ஈடுபட்டோரும் கைது செய்யப்பட்டனா்.

சத்தியமங்கலத்தில் ஈரோடு புறநகா் மேற்கு மாவட்டச் செயலாளா் முத்துசாமி தலைமையில், பேருந்து நிலையம் அருகே சத்தியமங்கலம் - மைசூரு தேசிய நெடுஞ்சாலையில் மறியல் போராட்டத்தில் கொமதேவினா் ஈடுபட்டனா். ஈஸ்வரனை உடனடியாக விடுவிக்கக் கோரி கண்டன கோஷமிட்டனா்.

சம்பவ இடத்துக்கு வந்த சத்தியமங்கலம் போலீஸாா் மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட கொங்குநாடு மக்கள் தேசியக் கட்சியினரை கைது செய்து, திருமண மண்டபத்தில் அடைத்தனா். மறியல் காரணமாக தேசிய நெடுஞ்சாலையில் 20 நிமிடம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com