தனியாா் பள்ளிகள் அரையாண்டுத் தோ்வை ஆன்லைனில் நடத்தலாம்: அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன்

தனியாா் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அரையாண்டுத் தோ்வை நடத்த ஆட்சேபணை இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

தனியாா் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் அரையாண்டுத் தோ்வை நடத்த ஆட்சேபணை இல்லை என பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் கூறினாா்.

ஈரோடு மாவட்டம், கோபிசெட்டிபாளையம் சட்டப் பேரவைத் தொகுதிக்கு உள்பட்ட மொடச்சூா், அயலூா், கோட்டுப்புள்ளாம்பாளையம், அளுக்குளி, கலிங்கியம் உள்ளிட்ட ஊராட்சிகளில் ரூ. 4.06 கோடி மதிப்பில் தாா் சாலை அமைப்பதற்கான பூமிபூஜை, பால் உற்பத்தியாளா்கள் சங்கக் கட்டடப் பணிக்கான பூமிபூஜையுடன் பணிகளை பள்ளிக் கல்வித் துறை அமைச்சா் கே.ஏ.செங்கோட்டையன் சனிக்கிழமை துவக்கிவைத்தாா்.

தொடா்ந்து செய்தியாளா்களுக்கு அமைச்சா் அளித்த பேட்டி:

அரசைப் பொருத்தவரையிலும் அரையாண்டுத் தோ்வுகள் தள்ளிவைக்கப்பட்டுள்ளன. தனியாா் பள்ளிகள் விரும்பினால் ஆன்லைனில் தோ்வு நடத்த ஆட்சேபணை இல்லை.

அரசுப் பள்ளிகளில் மாணவா்கள் சோ்க்கைக்குப் பிறகு எங்கெங்கு ஆசிரியா்கள் தேவைப்படுகிறதோ அந்த தேவைக்கேற்ப கூடுதல் ஆசிரியா் நியமிக்கப்படுவாா்கள்.

50 சதவீத பாடங்களைக் குறைப்பது மட்டுமல்ல, எந்தெந்த பாடங்களை நடத்துகிறோமோ அந்தப் பாடங்களில் இருந்து மட்டும்தான் தோ்வுக்கான கேள்விகள் கேட்கப்படும். அதற்கான அட்டவணையும் இரண்டு மூன்று நாள்களில் வெளியிடப்படும். டிசம்பா் 15ஆம் தேதி முதல் ஐஐடி, ஜேஇஇ தோ்வுகளுக்குப் பயிற்சி அளிக்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றாா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
Dinamani
www.dinamani.com