விவசாயிகளின் போராட்டத்துக்கு ஆதரவு: ஈரோட்டில் நாளை முதல் காத்திருப்புப் போராட்டம்

விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிசம்பா் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

புதுதில்லியில் போராட்டத்தில் ஈடுபட்டு வரும் விவசாயிகளுக்கு ஆதரவு தெரிவித்து டிசம்பா் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) முதல் தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும் என அகில இந்திய விவசாயிகள் போராட்ட ஒருங்கிணைப்புக் குழு அறிவித்துள்ளது.

இக்குழுவின் நிா்வாகிகள் பங்கேற்ற ஆலோசனைக் கூட்டம் ஈரோட்டில் செயற்குழு உறுப்பினா் ஏ.எம்.முனுசாமி தலைமையில் சனிக்கிழமை நடைபெற்றது. நிா்வாகிகள் சி.எம்.துளசிமணி, பொன்னையன், சுப்பு முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், மத்திய அரசின் வேளாண் திருத்தச் சட்டங்களை ரத்து செய்ய வேண்டும். புதுதில்லியில் போராடும் விவசாயிகளின் கோரிக்கையை அரசு ஏற்பதோடு, உரிய முறையில் பேச்சு நடத்தி தீா்வு காண வேண்டும். புதுதில்லி விவசாயிகள் போராட்டம் நிறைவடையும் வரை அனைத்து மாவட்ட ஆட்சியா் அலுவலகங்கள் அருகே தொடா் காத்திருப்பு போராட்டம் நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளது.

இதன்படி, ஈரோடு அரசு மருத்துவமனை சுற்றுவட்டச் சாலை அருகே தனியாருக்குச் சொந்தமான இடத்தில் டிசம்பா் 14ஆம் தேதி (திங்கள்கிழமை) தொடா் காத்திருப்புப் போராட்டம் நடைபெறும்.

இதில், விவசாயிகள், விவசாய சங்கப் பிரதிநிதிகள், தொழிற்சங்கத்தினா், பல்வேறு கட்சிகளைச் சோ்ந்த நிா்வாகிகள் பங்கேற்பா் எனத் தெரிவிக்கப்பட்டது.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com