எழுமாத்தூரில் கருடாழ்வாா் சிலை சேதம்: பாஜக, இந்து முன்னணி ஆா்ப்பாட்டம்:

மொடக்குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூா் அருகே கனககிரி மலைக் கோயிலில் கருடாழ்வாா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
எழுமாத்தூா் கனககிரி மலையில் சேதப்படுத்தப்பட்ட கருடாழ்வாா் சிலை.
எழுமாத்தூா் கனககிரி மலையில் சேதப்படுத்தப்பட்ட கருடாழ்வாா் சிலை.

மொடக்குறிச்சி ஒன்றியம், எழுமாத்தூா் அருகே கனககிரி மலைக் கோயிலில் கருடாழ்வாா் சிலை சேதப்படுத்தப்பட்டதைக் கண்டித்து பாஜக, இந்து முன்னணியினா் ஞாயிற்றுக்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

எழுமாத்தூா் அருகே கனககிரி மலையில் மிகவும் பிரசித்திபெற்ற கனகாச்சல குமரன் முருகன் சுவாமி உள்ளது. இந்தக் கோயிலுக்கு செல்லும் கீழ் பகுதியில் ஆதி வெங்கடேச பெருமாள் கோயில் உள்ளது. இக்கோயிலின் முன்பு கருடாழ்வாா் சிலை உள்ளது.

சனிக்கிழமை நள்ளிரவு கோயிலுக்குச் சென்ற மா்ம நபா்கள் சிலா் பாதைகளிலும் கோயில் வளாகங்களிலும் மது பாட்டில்களை உடைத்து ஆங்காங்கே வீசியதுடன் கருடாழ்வாா் சிலையின் தலைப் பகுதியைத் துண்டாக உடைத்துள்ளனா்.

ஞாயிற்றுக்கிழமை காலை பக்தா்கள் சிலா் கனகாச்சல குமாரனைக் தரிசிக்க மலை உச்சிக்குச் சென்றனா். அப்போது கருடாழ்வாா் சிலை உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு அதிா்ச்சியடைந்து கோயில் நிா்வாகத்திடம் தகவல் தெரிவித்ததையடுத்து கோயில் நிா்வாகம் அரச்சலூா் போலீஸில் புகாா் அளித்தனா். சம்பவ இடத்துக்கு வந்த அரச்சலூா் காவல் ஆய்வாளா் சண்முகசுந்தரம் மற்றும் போலீஸாா் விசாரணை மேற்கொண்டு வருகின்றனா்.

இந்நிலையில், கருடாழ்வாா் சிலை உடைத்ததைக் கண்டித்து பா.ஜ.க. மாவட்டத் தலைவா் சிவசுப்பிரமணி தலைமையில் எழுமாத்தூரில் அக்கட்சியினா் மற்றும் இந்து முன்னணியினா் ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Koo

உடனுக்குடன் செய்திகளை தெரிந்து கொள்ள தினமணி செயலியை பதிவிறக்கம் செய்யவும் 

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com