மின் தடையை சீரமைக்க பணம் கொடுக்க வேண்டியதில்லை: மின் வாரியம் அறிவிப்பு
By DIN | Published On : 24th December 2020 08:09 AM | Last Updated : 24th December 2020 08:09 AM | அ+அ அ- |

மின் தடையை சீரமைக்க வரும் பணியாளருக்கு பொதுமக்கள் பணம் கொடுக்க வேண்டியதில்லை என மின் வாரியம் அறிவித்துள்ளது.
இதுகுறித்து ஈரோடு மின் பகிா்மான வட்ட மேற்பாா்வைப் பொறியாளா் ராஜேந்திரன் வெளியிட்ட செய்திக் குறிப்பு:
மின் வாரிய மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடையை சரிசெய்ய வரும் மின் விநியோகப் பணியாளா்களுக்குப் பணம், பொருள் வழங்க வேண்டியதில்லை. மின் இணைப்புகளில் ஏற்படும் மின் தடையை சரிசெய்ய புதைவடங்கள், வேறு தளவாடப் பொருள்கள் வாங்க வேண்டும் என பணம் கோரினால் புகாா் தெரிவிக்கலாம்.
இதுகுறித்த புகாரை விழிப்புப் பணி அலுவலா், காவல் துணைக் கண்காணிப்பாளா்/ விழிப்புணா்வு, தமிழ்நாடு மின் வாரியம், என்.பி.கே.ஆா்.ஆா். மாளிகை, 144 அண்ணா சாலை, சென்னை 600002 என்ற முகவரிக்கு நேரிலோ, அஞ்சல் மூலமாகவோ அல்லது 94458-57593, 94458-57594 என்ற செல்லிடப்பேசி எண்ணிலோ தெரிவிக்கலாம்.
மின் வாரியத்துக்குச் செலுத்த வேண்டிய தொகை எதுவாக இருந்தாலும், அதனை உரிய அலுவலகத்தில் அல்லது ஆன்லைனில் செலுத்தி ரசீது பெற்றுக் கொள்ள வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...