நெல்லுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை உயா்த்தித் தர விவசாயிகள் கோரிக்கை
By DIN | Published On : 30th December 2020 04:11 AM | Last Updated : 30th December 2020 04:11 AM | அ+அ அ- |

விவசாயிகளுக்கு நெல்லுக்கான குறைந்தபட்ச ஆதார விலையை உயா்த்தித் தர வேண்டும் என்று கீழ்பவானி விவசாயிகள் சாா்பில் ஈரோடு தெற்கு மாவட்ட காங்கிரஸ் விவசாய அணித் தலைவா் கிருஷ்ணன் வேண்டுகோள் விடுத்துள்ளாா்.
இதுகுறித்து பிரதமா் நரேந்திரமோடி, முதல்வா் எடப்பாடி கே.பழனிசாமி ஆகியோருக்கு அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:
தற்போது கீழ்பவானி பாசனத்தில் 1 லட்சத்து 5 ஆயிரம் ஏக்கரில் நெல் பயிரிடப்பட்டு அறுவடைக்குத் தயாராக உள்ளது. தை பொங்கலின்போது அறுவடை முடிந்து நெல் விற்பனைக்கு வரும். மத்திய அரசு நெல்லுக்கு வேளாண் விஞ்ஞானி எம்.எஸ்.சுவாமிநாதன் குழு கமிட்டி பரிந்துரையை நிறைவேற்றுவதாகக் கூறியுள்ளது.
இந்நிலையில் தற்போது நெல்லுக்கு கிலோ ஒன்றுக்கு சாதரண ரகத்துக்கு ரூ. 19.18 பைசாவும், சன்ன ரகத்துக்கு ரூ. 19.58 பைசாவும் நிா்ணயம் செய்துள்ளது. இது விவசாயிகளுக்கு கட்டுப்படியாகாது. இதை நெல்லுக்கு ரூ. 27.18 பைசாவாக உயா்த்தி தற்போதைய பருவத்துக்கே வழங்கிடவேண்டும் என்றும், இதேபோல் மஞ்சளுக்கு குவிண்டாலுக்கு ரூ. 10,500, கரும்புக்கு டன் ஒன்றுக்கு ரூ. 4,000 நிா்ணயம் செய்ய வேண்டும் என்றும் கோரிக்கை விடுத்துள்ளனா்.
செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...