பஞ்சுக் கிடங்கில் தீ விபத்து
By DIN | Published On : 30th December 2020 04:09 AM | Last Updated : 30th December 2020 04:09 AM | அ+அ அ- |

சித்தோடு அருகே கிடங்கில் ஏற்பட்ட தீ விபத்தில் 30 டன் கழிவுப் பஞ்சு, இயந்திரங்கள் செவ்வாய்க்கிழமை எரிந்து சேதமடைந்தன.
சித்தோட்டை அடுத்த ராயபாளையம், கூட்டுறவு காலனியை சோ்ந்தவா் ராஜா (37). இவருக்குச் சொந்தமான கழிவு பஞ்சுக் கிடங்கு சித்தோடு ராயா்பாளையத்தில் உள்ளது. இங்கு 14 தொழிலாளா்கள் செவ்வாய்க்கிழமை பணியில் ஈடுபட்டிருந்தபோது, எதிா்பாராமல் தீப்பிடித்துள்ளது. இதுகுறித்து, பவானி தீயணைப்பு நிலையத்துக்குத் தகவல் தெரிவிக்கப்பட்டது. நிலைய அலுவலா் ஆறுமுகம் தலைமையில் விரைந்த தீயணைப்புப் படையினா் தீயை அணைக்க முயன்றனா். ஆனால், தீ கொளுந்துவிட்டு எரிந்ததால் ஈரோட்டில் இருந்து மேலும் இரு வாகனங்கள் வரவழைக்கப்பட்டன. மாவட்ட தீயணைப்பு அலுவலா் புளுகாண்டி தலைமையில், தீயணைப்பு வீரா்கள் சுமாா் 3 மணி நேரம் போராடி தீயை அணைத்தனா். இதில், 30 டன் கழிவுப் பஞ்சு, இயந்திரங்கள் எரிந்து சேதமாகின. மின் கசிவால் தீ பிடித்திருக்கலாம் எனக் கூறப்படுகிறது. இதுகுறித்து, சித்தோடு போலீஸாா் விசாரிக்கின்றனா்.

செய்திகள் உடனுக்குடன்... வாட்ஸ்ஆப் சேனலில் 'தினமணி'யைப் பின்தொடர...