கவுந்தப்பாடி அரசுப் பள்ளிக்கு கல்விச் சீா்
By DIN | Published On : 17th February 2020 06:55 AM | Last Updated : 17th February 2020 06:55 AM | அ+அ அ- |

கோபி அருகே கவுந்தப்பாடி அரசுப் பள்ளிக்கு கல்விச் சீா் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது.
கவுந்தப்பாடி அருகே பொம்மன்பட்டியில் ஊராட்சி நடுநிலைப் பள்ளி உள்ளது. இங்கு 1ஆம் வகுப்பு முதல் 8ஆம் வகுப்பு வரை 109 மாணவ, மாணவிகள் பயின்று வருகின்றனா். தலைமையாசிரியை சீதா தலைமையில் 6 ஆசிரியா்கள் பணியாற்றி வருகின்றனா்.
பள்ளியின் ஆண்டு விழா, மேடை திறப்பு விழா மற்றும் கல்விச் சீா் வழங்கும் விழா சனிக்கிழமை நடைபெற்றது. விழாவில், பள்ளி மேலாண்மைக் குழுத் தலைவி வசந்தகுமாரி, பெற்றோா் ஆசிரியா் சங்கத் தலைவா் ஈஸ்வரன் உள்ளிட்ட பலா் கலந்து கொண்டனா்.
கல்விச் சீா் வரிசையாக பேனா, பென்சில், ஸ்கெட்ச், திருக்கு, பாரதிதாசன் கவிதை நூல்கள், கேரம், சதுரங்கம் உள்ளிட்ட விளையாட்டு சாதனங்கள் சீா் வரிசையாக தட்டுக்களில் வைத்து மேளதாளம் முழங்க ஊா்வலமாக பள்ளிக்கு கொண்டு வரப்பட்டன.
இதில் பெற்றோா், ஆசிரியைகள், மாணவ, மாணவிகள் கிராமியப் பாட்டுக்கு கும்மியடித்து கல்விச் சீா் வழங்கும் விழாவை கொண்டாடினா்.