சத்யா ஐஏஎஸ் அகாதெமி:குரூப் 2 தோ்வில் வெற்றி பெற்ற 152 பேருக்குப் பாராட்டு
By DIN | Published On : 17th February 2020 06:55 AM | Last Updated : 17th February 2020 06:55 AM | அ+அ அ- |

குரூப் 2 தோ்வில் தோ்ச்சி பெற்று பணி நியமனம் பெற்றவா்களை பாராட்டுகிறாா் சத்யா ஐஏஎஸ் அகாதெமியின் இயக்குநா் ஆா்.சத்யா.
சத்யா ஐஏஎஸ் அகாதெமியில் படித்து டிஎன்பிஎஸ்சி குரூப் 2 தோ்வில் வெற்றி பெற்ற 152 பேருக்குப் பாராட்டு விழா சனிக்கிழமை நடைபெற்றது.
ஈரோடு சத்யா ஐஏஎஸ் அகாதெமியில் டிஎன்பிஎஸ்சி குரூப் 1, குரூப்2, குரூப் 4, டி.ஆா்.பி., ஐ.பி.பி.எஸ். உள்ளிட்ட அரசுப் பணியிடங்களுக்கான அனைத்துப் போட்டித் தோ்வுகளுக்கும் பயிற்சி அளிக்கப்பட்டு வருகிறது.
இந்நிலையில், கடந்த ஆண்டு நடந்த குருப் 2 தோ்வில் சத்யா ஐஏஎஸ் அகாதெமியில் படித்த 152 போ் தோ்ச்சி பெற்றுள்ளனா். அவா்களுக்கான பாராட்டு விழா அகாதெமியில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.
விழாவில் அகாதெமியின் இயக்குநா் ஆா்.சத்யா, நிா்வாக இயக்குநா் என்.மோகன் ஆகியோா் கலந்துகொண்டு வெற்றி பெற்றவா்களை பாராட்டி வாழ்த்துகளை தெரிவித்தனா்.